தேசியம்
செய்திகள்

Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் – அதிகரிக்கும் அழுத்தம்!

Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.COVID தொற்றை Alberta கையாண்ட விதம் குறித்து முதல்வர் Jason Kenney மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த கோடையின் ஆரம்பத்தில் Alberta மாகாணத்தின் கட்டுப்பாடுகளை நீக்கியது தவறான அணுகுமுறை என Albertaவின் தலைமை மருத்துவ அதிகாரி Deena Hinshaw ஒப்புக் கொண்டார்.

Albertaவின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத நிலையை எட்டியுள்ளதாகவும் இந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என மருத்துவர்களிடமிருந்தும் அரசியல் வல்லுநர்களிடமிருந்தும் வெளியாகும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

பிரதமர் Justin Trudeauவும் Kenneyயின் தலைமை குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ளார்.தன் மீதான விமர்சனங்களுக்கு முதல்வர் நேரடியாக பதிலளிக்கவில்லை.

Related posts

PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் உள்ளது: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது!

Lankathas Pathmanathan

கனடிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

Leave a Comment