தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தலில் இருந்து விலகும் மேலும் இரு வேட்பாளர்கள்!

இரண்டு NDP வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். Ontarioவில் Toronto-St. Paul தொகுதியின் வேட்பாளர் Sidney Coles, Nova Scotiaவில் Cumberland-Colchester தொகுதியின் வேட்பாளர் Dan Osborne ஆகியோர் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.

மதவெறியான சமூக ஊடக பதிவுகளை அடுத்து இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக கட்சி உறுதி செய்தது.

தனது கட்சியில் மதவெறிக்கு இடமில்லை என கூறிய NDP தலைவர் Jagmeet Singh வேட்பாளர்கள் பதவி விலகியது சரியான முடிவு எனவும் தெரிவித்தார்.

ஏனைய கட்சிகளின் ஒரு சில வேட்பாளர்கள் ஏற்கனவே தேர்தலில் இருந்து விலகியுள்ளனர்.

Conservative கட்சியின் Beaches-East York தொகுதியின் வேட்பாளர் கடந்த வாரம் தேர்தலில் இருந்து விலகினார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான சமூக ஊடக பதிவுகள் வெளிவந்த பின்னர் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டது.

Liberal கட்சியின் Kitchener மத்திய தொகுதியின் வேட்பாளர் Raj Sainiயும் அண்மையில் தேர்தலில் இருந்து விலகியிருந்தார்.

பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக Saini மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது: பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

York பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலைப்பு

Lankathas Pathmanathan

988 என்னும் தற்கொலை உதவி எண் கனடா முழுவது அறிமுகம்

Lankathas Pathmanathan

Leave a Comment