இந்த வருடம் கனடாவில் சராசரி வீட்டு விலை 680 ஆயிரம் டொலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.இது கடந்த வருடத்தை விட 19.9 சதவீத அதிகரிப்பாகும்.
கனேடிய Real Estate சங்கம் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டது.முன்னதாக கணித்ததை விட குறைவான வீடுகள் இந்த வருடம் விற்பனையாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு வீட்டு விலைகள் 5.6 சதவீதம் உயர்ந்து சுமார் 718 ஆயிரம் டொலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டில் கனேடிய வீடு விற்பனை 12.1 சதவீதம் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.