Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.COVID தொற்றின் நாளாந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை Alberta மாகாண அரசாங்கம் எடுத்துள்ளது.
Albertaவின் முதல்வர் Jason Kenney இந்த அறிவித்தலை வெளியிட்டார். Alberta தடுப்பூசி சான்றிதழ் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளது.
கனடாவின் ஏனைய பல மாகாணங்கள் ஏற்கனவே அறிவித்துள்ள தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தை Albertaவும் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற அவசர அமைச்சரவை சந்திப்பின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது.புதிய கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்றின் நான்காவது அலையை தடுப்பூசி போடாதவர்களின் நெருக்கடி என Kenney வர்ணித்துள்ளார். Albertaவில் புதன்கிழமை 1,609 புதிய தொற்றுக்களும் 24 மரணங்களும் பதிவாகின.