தேசியம்
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் புதிய விவரங்கள் வெளியீடு!

தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் புதிய விவரங்களை Ontario மாகாணம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

எதிர்வரும் 22ஆம் திகதி முதல் COVID தடுப்பூசி நிலையை எவ்வாறு நிரூபிப்பது என்பது குறித்த புதிய விவரங்கள் வெளியிடப்பட்டது.

அத்தியாவசியமற்ற நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசிகள் கட்டாயமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக Ontario வணிகங்களுக்கான மேலதிக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

October 22ஆம் திகதி மேம்படுத்தப்பட்ட சான்றிதழ் கிடைக்கும் வரை Ontario வாசிகள் அரசாங்க வலைத்தளத்திலிருந்து தங்கள் இரண்டாவது தடுப்பூசிக்கான ஆதாரத்தை பதிவிறக்க வேண்டும்.

தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கான அபராதம் 750 டொலர் முதல் 1,000 டொலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மோசடி ஆவணங்களை சமர்பிப்பவர்களுக்கும் இதே அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் தடுப்பூசிக்கு இன்னும் தகுதியற்ற 12 வயதிற்குட்பட்டவர்களை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எச்சரிக்கை

Quebec: AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை குறைப்பது குறித்து ஆலோசனை!

Gaya Raja

10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் COVID காரணமாக வைத்தியசாலைகளில்

Lankathas Pathmanathan

Leave a Comment