தேசியம்
செய்திகள்

வைத்தியசாலைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

பல மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பரவலான கண்டனங்களுக்கு மத்தியில் திங்களன்று நடைபெற்ற போராட்டங்களை CFN எனப்படும் கனேடிய முன்னிலை செவிலியர்கள் என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது.

Torontoவில் திங்கட்கிழமை நடைபெற்ற தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ள Ontarioவின் தடுப்பூசி திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர்.

Ontario சட்டமன்றத்திற்கு முன்பாக திங்கள் பிற்பகலில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Toronto தவிரவும் Ottawa, Winnipeg, Montreal, Halifax, Calgary, Alberta உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றன.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அனைத்து மட்ட அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட இந்த இடையூறுகளை வன்மையாகக் கண்டிப்பதாக Ontarioவின் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் சங்கம், Ontario மருத்துவ சங்கம் கூட்டாக அறிக்கை வெளியிட்டது .

Related posts

கனடிய பிரதமரின் கருத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவில் விரிசல்: சீனா கண்டனம்

Lankathas Pathmanathan

முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!

Lankathas Pathmanathan

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

Lankathas Pathmanathan

Leave a Comment