December 27, 2024
தேசியம்
கனேடிய தேர்தல் 2021

மாற்றத்தை விரும்பும் கனேடியர்களின் தெரிவு Erin O’Toole?

ஒரு கடுமையான கட்சி தலைமை பிரச்சாரத்திலிருந்து வெற்றி பெற்று ஒரு வருடம் கழித்து, Erin O’Toole ஒரு புதிய பிரச்சாரத்தில் நுழைகிறார். இம் முறை அவருக்கான போட்டியும் பரிசும் மிகப் பெரியது.August 24, 2020 – ஒரு அதிகாலை பொழுதில் Conservative கட்சியில் தலைமை பதவியை வெற்றி கொண்டார் O’Toole. நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் அவர். ஆனாலும் பெரிதாக கனேடியர்களுக்கு அறிமுகமில்லாதவராகவே அவர் இருந்திருந்தார்.

ஐந்து பிள்ளைகளில் மூத்தவரான O’Toole, 1973இல் Montrealலில் பிறந்தவர். அவரது தந்தை மாகாண அரசியலில் நுழைவதற்கு முன்பு General Motors நிறுவனத்தில் பணிபுரிந்தார் – அவரது தாயார் ஒரு ஆசிரியராக இருந்தவர். தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவர் பொதுச் சேவையில் நுழைந்தார். நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான Bev Oda தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்த பின்னர், 2012 இல் Durham பிராந்திய இடைத் தேர்தலில் போட்டியிட்டார் O’Toole. அந்தத் தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். Conservative தலைவராக அவரது முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும். எட்டாம் ஆண்டில் படிக்கும் போதே கனடாவின் பிரதமராக வேண்டும் என்று கனவு கண்டவர் O’Toole. இம்முறை அவரது கனவு நிறைவேறுமா?

ரம்யா சேது

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவுக் குரல்!

Gaya Raja

வெளியானது Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Gaya Raja

Leave a Comment