Albertaவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
COVID தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுகாதார அமைப்பு சரிந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் தொற்றின் நான்காவது அலையை தடுக்க பொது சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசாங்கத்திடம் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.
ஊழியர் நெருக்கடி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் அதிகரிக்கும் தொற்றாளர்கள், மாகாண அரசாங்கத்திடமிருந்து வெளியாகும் முரண்பட்ட தகவல்கள் ஒரு மோசமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Albertaவின் தீவிர சிகிச்சை பிரிவின் திறன் 87 சதவீதமாக உள்ளது.COVID காரணமாக புதன்கிழமை வரை மருத்துவமனையில் 647 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் 147 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக சுகாதார சேவைகள் தரவுகள் தெரிகின்றன.
Albertaவில் வியாழக்கிழமை 1,510 தொற்றுக்கள் பதிவானதுடன் 9 மரணங்களும் பதிவு செய்யப்பட்டன.