கனடாவில் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
4,184 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Albertaவில் 1,510 தொற்றுகளும் 9 மரணங்களும், Ontarioவில் 798 தொற்றுக்களும் 10 மரணங்களும், British Columbiaவில் 774 தொற்றுகளும் 5 மரணங்களும், Quebec 703 தொற்றுக்களும் 1 மரணமும், Saskatchewanனில் 286 தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவாகியது.
Manitobaவில் 54 தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவானது.தவிரவும் Northwest Territoriesயில் 23, Nova Scotiaவில் 17, New Brunswickகில் 17, Yukonனில் 2 என தொற்றுகள் பதிவாகின.
வியாழக்கிழமையுடன் நாடளாவிய ரீதியில் 1,533,489 தொற்றுக்களும் 27,134 மரணங்களும் பதிவாகின.