தமது தேர்தல் பிரச்சாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என Justin Trudeau தெரிவித்தார்.
திங்கட்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த Liberal கட்சி தலைவர் மீது சரளைக் கற்கள் வீசப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இந்த நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரச்சாரங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என Trudeau செவ்வாய்கிழமை கூறினார்.
தன் மீது சரளைக்கற்கள் வீசப்பட்டதை உணர்ந்ததாக கூறிய Trudeau அதனால் தான் காயமடையவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்தின் விளைவாக என்ன நடக்க வேண்டும் என்பதை காவல்துறையினரின் முடிவுக்கு விட்டு விடுவதாகவும் அவர் கூறினார்.
திங்களன்று London Ontarioவில் நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்வின் போது Liberal தலைவர் மீது யாரோ சரளைக் கற்கள் வீசியது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் தகவல் கோரியுள்ளதாக காவல்துறை சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த கற்கள் Trudeauவை மட்டுமல்லாது, அவருக்கு பாதுகாப்பு வழங்கிய RCMP உறுப்பினர்கள் சிலர், பிரச்சாரத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலரையும் தாக்கியது.
Trudeauவின் பிரச்சாரத்தில் நிகழ்ந்த வன்முறையை ஏனைய கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்திருந்தனர்.