February 23, 2025
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

மூன்று பெரிய கட்சிகள் பிரச்சாரத்திற்கு சுமார் 30 மில்லியன் டொலர்கள் வரை செலவிட முடியும்: கனேடிய தேர்தல் திணைக்களம்

மூன்று பெரிய கட்சிகளின் பிரச்சார செலவுகளுக்கு சுமார் 30 மில்லியன் டொலர்கள் வரம்பை கனேடிய தேர்தல் திணைக்களம் அறிவித்தது.

இப்போது முழு வீச்சில் உள்ள தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகளின் செலவுகளுக்கான உச்ச வரம்பை கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி Stephane Perrault அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் கட்சிகள் தொகுதிகளில் வேட்பாளரை நியமித்த எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் செலவின வரம்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.

338 தேர்தல் தொகுதிகளில் ஒரு வேட்பாளரை நியமித்த Liberal மற்றும் NDP கட்சிகள் ஒவ்வொன்றும் 30.03 மில்லியன் டொலர்கள் செலவின வரம்பை எதிர்கொள்கின்றன.

Conservative கட்சி அதிகபட்சமாக 29.95 மில்லியன் டொலர்களை செலவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் Nova Scotiaவில் ஒரு வேட்பாளரை விலக்கிய நிலையில் Conservative கட்சி 337 தொகுதிகளில் மாத்திரம் வேட்பாளர்களை நியமித்துள்ளது.

Maxime Bernier தலைமையிலான கனடாவின் மக்கள் கட்சி, 27.87 மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட முடியாது.

252 வேட்பாளர்களை நியமித்துள்ள பசுமை கட்சி, 22.58 மில்லியன் டொலர்களை செலவிட முடியும்.

Quebecகில் மட்டும் போட்டியிடும் Bloc Quebecois, 7.16 மில்லியன் டொலர்களை செலவிட முடியும்.

கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமான செலவுகளுக்கான இறுதி வரம்புகள் September 13 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கனேடிய தேர்தல் திணைக்களம் அறிவித்தது.

Related posts

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja

கனடாவில் இதுவரை 34,026 COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

Saskatchewan முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment