February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் 800 வரை தாண்டிய நாளாந்த தொற்றுக்கள்

மீண்டும் ஒருமுறை அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுக்கள் வியாழக்கிழமை Ontarioவில் பதிவாகின.

865 புதிய தொற்றுகளையும் 14 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை பதிவு செய்தனர்.

கடந்த மூன்று நாட்களில் நாளாந்தம் 700க்கும் குறைவான புதிய தொற்றுக்களை அதிகாரிகள் பதிவு செய்த பின்னர் 865 தொற்றுக்களை பதிவு செய்தனர்.

இதன் மூலம் கடந்த வாரம் 646ஆக இருந்த Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது 728 ஆக உள்ளது,

மாகாணத்தின் ஏழு நாள் சராசரி பல வாரங்களாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் Ontarioவில் இதுவரை 21 மில்லியன் வரையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

AstraZeneca தடுப்பூசி; இரத்த உறைவால் Quebec இல் பெண் ஒருவர் மரணம்!!

Gaya Raja

Toronto பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

மத்திய வங்கி ஏன் வட்டி விகிதத்தில் அதிகரிப்பை அறிவிக்கவில்லை?

Lankathas Pathmanathan

Leave a Comment