கனடாவில் COVID தொற்று எண்ணிக்கை ஒரு மில்லியன் ஐநூறு ஆயிரத்தை தாண்டியது.
புதன்கிழமை மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3,852 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
Albertaவில் 1,315 தொற்றுக்களும் 8 மரணங்களும், British Columbiaவில் 785 தொற்றுக்ளும் இரண்டு மரணங்களும், Quebecகில் 690 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும், Ontarioவில் 656 தொற்றுக்களும் 13 மரணங்களும், Saskatchewanனில் 321 தொற்றுக்களும், புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா நூற்றுக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.
அதேவேளை கனடாவில் தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை அண்மிக்கின்றது.