12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு Health கனடா அங்கீகரித்துள்ளது.
கனடாவில் இந்த வயதினருக்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக Moderna தடுப்பூசி மாறியுள்ளது.
ஏற்கனவே Pfizer தடுப்பூசியை இந்த வயதினர் பயன்படுத்த Health கனடா அங்கீகரித்துள்ளது.
கடந்த வருடம் December முதல் கனடாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்த Moderna தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது.
Pfizer தடுப்பூசி கடந்த May மாதம் முதல் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த இரண்டு தடுப்பூசிகளும் இளைஞர்களுக்கு தொற்றுக்கு எதிராக மிகச் சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு கூறியது.