கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிகமானவர்களை வெளியேற்றியுள்ளது.
அமெரிக்க விமானம் ஒன்றில் 500 பேரை கனடா வெளியேற்றியுள்ளதாக குடிவரவு அமைச்சர் Marco Mendicino வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிந்துவிட்டதாக கனேடிய அதிகாரிகள் அறிவித்த ஒரு நாளின் பின்னர் குடிவரவு அமைச்சரின் இந்த அறிவித்தல் வெளியானது.
கனேடிய இராணுவத்தின் வெளியேற்ற முயற்சிகள் முடிந்துவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டிய மக்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வழிவகைகளையும் நேச நாடுகளுடன் இணைந்து கனடா முன்னெடுக்கும் என அமைச்சர் Mendicino கூறினார்.
வெளியேற்றப்பட்டவர்களில் கனேடியர்களும் ஆப்கானியர்களும் அடங்குவதாக வெளியுறவு அமைச்சர் Marc Garneau தெளிவுபடுத்தினார்.
அவர்கள் வெளியேறுவதற்கான ஆசனங்களை கனடா முன்னர் ஒதுக்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.