COVID தடுப்பூசியால் 2,700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையோ அல்லது முதியவர்கள் இறப்பதையோ Ontario மாகாணம் தவிர்த்துள்ளது.
தடுப்பூசி திட்டம் இல்லாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே, Ontario குறைந்தது 2,759 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையோ அல்லது முதியவர்கள் இறப்பதையோ கண்டிருக்கும் என மாகாண பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.
Ontarioவிலே 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 92 சதவீதத்திற்கும் அதிகமானோர் August 16 வரை முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
அதே போல் 70 முதல் 79 வயதுடையவர்களில் 93.5 சதவிகிதத்தினர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
இதேவேளை வியாழக்கிழமை காலை வரை தகுதி வாய்ந்த கனேடியர்களில் 74.75 சதவிகிதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.