கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலையின் பரவலை தடுக்க தடுப்பூசிகள் மாத்திரம் போதாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மீண்டும் தடைகளைத் தவிர்ப்பதற்கும், தடுப்பூசி போடாதவர்களை பாதுகாப்பதற்கும் கனேடியர்கள் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொற்றுக்கு எதிராக 10 மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் தடுப்பூசி போடப்படாத நிலை தற்போது உள்ளது.
இதனால் புதிய தொற்றின் மாறுபாட்டால் ஏற்கனவே சவால்களை எதிர்கொள்ளும் சில மாகாணங்களின் மருத்துவமனைகள் மேலும் சவால்களை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.