கனடாவின் இராணுவம் அமெரிக்க காலக்கெடுவிற்கு முன்னர் காபூலை விட்டு வெளியேறும் என அறிவிக்கப்பட்டது.
கனேடிய இராணுவம் எதிர்வரும் நாட்களில் காபூல் விமான நிலையத்தில் தனது பணியை முடிக்க ஆரம்பிக்கும் என பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjan புதன்கிழமை கூறினார்.
அமெரிக்கா இந்தப் பணியை முன்னெடுத்துச் சென்று பாதுகாப்பை வழங்கி வருவதாக அமைச்சர் Sajjan தெரிவித்தார்.
இந்த மாதத்தின் இறுதிக்கு பின்னரும் கனடா காபூலில் தங்க தயாராக இருப்பதாக இந்த வாரம் பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சர் ஊடாக வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் Marc Garneau கூறினார்.
கனடா இதுவரை 1,600க்கும் அதிகமான ஆப்கானியர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.