Quebec மாகாணத்தை யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது Liberal-Bloc Quebecois மோதலாக
மாறலாம்.
Quebecகில் வாக்குகளுக்கான போர் Liberal கட்சிக்கும் Bloc Quebecoisக்கும் இடையிலான
மோதலாக உருவாகிறது. ஆனால் வரலாறு Quebec மாகாணத்தின் வாக்காளர்கள் ஒரு
ஆச்சரியத்தை வழங்கக்கூடிய திறன் கொண்டவர்கள் என்பதை காட்டுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, Liberal கட்சி Quebecகில் 35 ஆசனங்களையும் Bloc
Quebecois 32 ஆசனங்களையும் கொண்டிருந்தன. Conservative கட்சி 10 ஆசனங்களையும், NDP ஒரு ஆசனத்தையும் தன்வசம் கொண்டிருந்தது.
Liberal கட்சி தலைவர் Justin Trudeau மீண்டும் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க
விரும்பினால் Quebecகில் வெற்றி பெறுவது அவசியம். ஆனாலும் Yves-Francois Blanchetன்
தலைமையில் 2019 ஆம் ஆண்டில் Bloc Quebecois கட்சி Quebecகில் எழுச்சி கண்டதை மறந்துவிட முடியாது.
Liberal 2015 ஆம் ஆண்டில் பெரும்பான்மையும், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை
அரசாங்கத்தையும் வென்றனர். குறிப்பாக Montreal அல்லது Quebec நகரத்தின் புறநகர் பகுதிகளை சுற்றி சில இடங்களை வெற்றி பெறுவது மீண்டும், Liberal கட்சி பெரும்பான்மை அமைப்பதற்கான வழியின் ஒரு பகுதியாகும். இதில் வெற்றிகரமாக இருக்க, Trudeau ஒரு தனித்துவமான தேசிய நோக்குடன் ஒரு மாகாண அரசியல் சூழலை கவனமாக வழிநடத்த வேண்டும்.
Québec தேசியவாதத்தின் புதுப்பிக்கப்பட்ட நிலைக்கு மாகாண முதல்வர் Francois Legault தலைமை தாங்குகிறார். மத சின்னங்களை தடை செய்யும் சட்டம், கடுமையான பிரெஞ்சு மொழி சட்டம், Quebecகில் பிரெஞ்சு மட்டுமே அதன் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கனடாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு முன்மொழிவு ஆகியவவை Legault முன்னெடுத்துள்ள நகர்வுகள் சில.
Quebec நகரத்திற்கு அருகில் Conservative ஆதரவுத் தளம் உள்ளபோதிலும், தேசியவாத மறுப்பு
என்ற நிலைப்பாடு Quebecகில் Conservative கட்சி வெற்றி பெறுவதை கடினமாக்குகிறது. NDPக்கும் அதே நிலைதான். Conservative கட்சி தலைவர் Erin O'Toole பிறந்தது Montreal என்றாலும், அவருக்கும் NDP கட்சி தலைவர் Jagmeet Singhக்கும் மாகாணத்துடன் குறிப்பாக வலுவான தொடர்புகள் இல்லை.
எவ்வாறாயினும், Quebec வாக்காளர்கள் ஆச்சரியங்களை செய்ய முடியும் என்பதை மீண்டும்
மீண்டும் நிரூபித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தல்களில், மாகாணத்தின் வாக்காளர்களில் கணிசமான தொகுதி, தேர்தல் போக்கை மாற்றுவதற்கு போதுமான அளவில் விசுவாசத்தை மாற்ற தயாராக இருந்தனர்.
2011ஆம் ஆண்டில், Quebec வாக்காளர்கள் "orange wave" எனப்படும் மிகப்பெரிய உந்து சக்திக்கு காரணமாக இருந்தனர். இது Jack Layton தலைமையிலான NDP கட்சியை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி நிலைக்கு தள்ளியது.
வரலாற்றில் NDP பெற்ற சிறந்த தேர்தல் முடிவாகவும் இது அமைந்தது. 2015ஆம் ஆண்டில்,
Trudeauவின் Liberal கட்சி பெரும்பான்மை அமைக்க இந்த மாகாணம் உதவியது. மூன்று
ஆண்டுகளுக்கு முன்னர், Bloc Quebecois தனது ஆசன எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்த இதே மாகாணம் காரணமாக இருந்தது. இந்த வெற்றியை சில ஆய்வாளர்கள் மாத்திரம் கணித்தனர்.
இந்த நிலையற்ற தன்மை, அதிக நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையுடன் இணைந்து, Quebec மாகாணத்தை ஒரு சாத்தியமான "kingmaker" நிலைக்கு தள்ளுகிறது. ஒரு பெரிய வெற்றியின் சாத்தியம் அரசியல் தலைவர்களுக்கு இந்த மாகாணத்தை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது என்றாலும், அதன் வாக்காளர்களின் விசுவாசத்தை எது தூண்டுகிறது என்பது எப்போதும் தெளிவாக இல்லை.
NDP, Conservative ஆகிய கட்சிகள் தவிர்த்து, இம்முறையும் Quebec தேர்தல் களம் Bloc Quebecois,
Liberal கட்சிகளின் போட்டியாக அமையும் என்பதன் அடிநாதம் இதுதான்.
பத்மன் பத்மநாதன்