கனடாவில் COVID தொற்றால் 95 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் வரை பாதிக்கப்பட்டதுடன் 43 பேர் இறந்துள்ளனர்.
சுகாதார தகவலுக்கான கனேடிய நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விபரம் வெளியானது.
கடந்த June மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதி தரவுகளின் அடிப்படையில் இந்த விவரம் வெளியிடப்பட்டது.
கனடாவில் பதிவான 1.4 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்களில் 94 ஆயிரத்து 873 பேர் சுகாதாரப் பணியாளர்கள் என தெரியவருகின்றது.
சுகாதாரப் பணியாளர்களில் அதிகமான தொற்றுக்கள் Quebecகிலும் Ontarioவிலும் பதிவாகின
Quebecகில் 12.3 சதவீதமும், Ontarioவில் 4.4 சதவீதமும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் தொற்றுக்கள் பதிவிடப்பட்டுள்ளது.
கனடாவில் பதிவான மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கையில் 6.8 சதவீதம் சுகாதாரப் பணியாளர்களாவார்கள்.
கடந்த வருடம் July மாதம் வரை கனடாவின் மொத்த தொற்றுக்களில் 19.4 சதவீதம் சுகாதாரப் பணியாளர்கள் என கணக்கிடப்பட்டது.
இந்த எண்ணிக்கை இந்த வருடத்தின் January மாதம் 9.5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.