தேசியம்
செய்திகள்

மீட்பு நடவடிக்கைக்காக ஆப்கானிஸ்தான் சென்றடைந்த கனேடிய படையினர்!

ஆப்கானிஸ்தானில் உள்ள கனேடியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபடவுள்ள கனடா படையினரும் அவர்களுக்கான உபகரணங்களும் ஆப்கானிஸ்தானை சென்றடைந்துள்ளன.

வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் Justin Trudeau இந்தத் தகவலை வெளியிட்டார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கனேடியர்களை வெளியேற்றும் பணியில் கனேடிய சிறப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என முன்னரே அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானை சென்றடைந்துள்ள கனேடியப் படையினர், கனேடியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்ற உதவுவார்கள் என Trudeau தெரிவித்தார்.

இந்த நிலையில் கனடா தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் நிலைமையை கண்காணித்து வருவதாக உலகளாவிய விவகாரங்களுக்கான கனடாவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 40,000 கனேடிய துருப்புக்கள் 13 வருடங்களாக NATO பணியின் ஒருபகுதியாக நிலை நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் கனேடியர்களுக்கு உதவிய ஆப்கானியர்களை கனடாவுக்கு அழைக்கும் கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Related posts

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளது

Lankathas Pathmanathan

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!