Ontarioவில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் 500க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் எனத் தெரியவருகின்றது.
வெள்ளியன்று 510 தொற்றுக்களையும் 4 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Ontarioவில் வியாழக்கிழமை 513 தொற்றுக்கள் பதிவாகின.
புதிய தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி இப்போது 399 ஆக உள்ளது. இது வியாழக்கிழமை 375 ஆகவும், ஒரு வாரத்திற்கு முன்னர் சுமார் 200 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள 111 பேரில் 108 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை என சுகாதார அமைச்சர் Christine Elliott கூறுகிறார். வெள்ளியன்று பதிவான 510 தொற்றுக்கள், 368 தடுப்பூசி போடாதவர்களையும், 57 ஒரு தடுப்பூசி போடப்பட்டவர்களையும் உள்ளடக்கியது எனவும் அவர் கூறினார்.