British Colombiaவில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக 500க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளிக்கிழமையன்று மாகாண சுகாதார அதிகாரிகள் 717 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். இது May மாத ஆரம்பத்தின் பின்னரான அதிக எண்ணிக்கையிலான ஒரு நாள் தொற்றுக்களாகும். ஆனால் வெள்ளிக்கிழமை British Colombiaவில் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
இதன் மூலம் மாகாணத்தின் ஏழு நாளுக்கான நாளாந்த சராசரி தொற்று எண்ணிக்கை 463ஆக அதிகரித்தது.
வெள்ளிக்கிழமை மதியம் வரை 82.4 சதவிகிதம், தகுதியான British Colombia குடியிருப்பாளர்கள் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். 72 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.