கனடா COVID தொற்றின் நான்காவது அலைக்குள் நுழைந்துள்ளதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான இறுதி modelling விபரங்களுக்கு பின்னர், நாடளாவிய ரீதியில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக Tam வியாழக்கிழமை கூறினார்.
தொற்றின் மாறுபாடுகள் தொடர்ந்து பரவுவதால் தடுப்பூசி போடாதவர்களிடையே தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் 1,500 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், இவற்றில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் Tam கூறினார்.
வியாழக்கிழமை மதியம் வரை 82 சதவிகிதம் தகுதிவாய்ந்த கனேடியர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையும் 71 சதவிகிதமானவர்கள் முழுமையான தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.