கனடா 10 மில்லியன் Johnson & Johnson தடுப்பூசிகளை உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கு வழங்குகிறது.
கனடாவின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் Karina Gould, கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் இணைந்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிவித்தலை வெளியிட்டனர் .
Johnson & Johnsonனுடனான கனடாவின் மேம்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்திலிருந்து இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
June மாதம் நடந்த G7 உச்சி மாநாட்டில், பிரதமர் Justin Trudeau வளரும் நாடுகளுடன் 100 மில்லியன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில் வெளியான அறிவிப்பு கனடாவின் பங்களிப்பை 40 மில்லியனுக்கு மேல் கொண்டு வருகிறது.