கனடாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் ஆழ்குளிரூட்டியினுள் தேங்கிக் கிடக்கின்றன.
Health கனடாவினாலும் மாகாணங்களாலும் வழங்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் கிட்டத்தட்ட 22 மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் ஆழ்குளிரூட்டியினுள் தேங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் வழங்கப்பட்ட 11.7 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளும் இதில் அடங்குகின்றன.
இவற்றில் எத்தனை தடுப்பூசிகள் ஏனைய நாடுகளுக்கு நன்கொடை வழங்கப்படும் என்பது இதுவரை முடிவாகவில்லை என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
புதன்கிழமை கனேடியர்களில் ஏறக்குறைய 23.6 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .