COVID தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
17 மாதங்களாக கனேடிய அமெரிக்க எல்லையில் இருந்த அத்தியாவசியமற்ற பயணத்திற்கான தடை திங்கட்கிழமை நள்ளிரவில் இருந்து தளர்த்தப்பட்டுள்ளது.
Health கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான தடுப்பூசியை பெற்ற தகுதியான அமெரிக்காவில் வாழும் பயணிகள், தடுப்பூசி பெற்ற 14 நாட்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனாலும் கனேடிய பயணிகளுக்கு அமெரிக்கா தனது பயணத் தடைகளை இதுவரை நீக்கவில்லை.