Tokyo Paralympic போட்டிகளுக்கு கனடா 128 விளையாட்டு வீரர்களை அனுப்புகிறது.
எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் Paralympic போட்டிகளுக்கு கனடா 128 விளையாட்டு வீரர்களை அனுப்புகிறது என கனடிய Paralympic குழு அறிவித்தது.
இவர்களில் Rio 2016 Paralympic அணியில் இருந்து 68 வீரர்களும், முந்தைய பதக்கங்கள் வென்ற 26 வீரர்களும் அடங்குகின்றனர்.
இந்த குழுவில் 11 கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களாக 71 பெண்களும் 57 ஆண்கள் அங்கம் வகிக்கின்றனர்.