கனடா – அமெரிக்க எல்லை குறித்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டின் தலைவர்களும் உரையாடியுள்ளனர்.
கனடிய பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்று திங்கட்கிழமை நடைபெற்றதாக கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களையும் நிரந்தர குடியிருப்பாளர்களையும் கனடாவுக்குள் அனுமதிக்க கனடா முடிவு செய்துள்ளது. ஆனாலும் கனடியர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க அமெரிக்கா முடிவு எதனையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் கனடிய பிரதமர் Justin Trudeau, அமெரிக்க ஜனாதிபதி Joe Biden ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.
இந்த உரையாடலின்போது வேறு பல விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.