Ontarioவில் அனைத்து மாணவர்களும் அடுத்த மாதம் ஆரம்பமாகும் கல்வி ஆண்டில் முழு நேரம் வகுப்பறைக்கு திரும்ப முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
Ontario அரசாங்கத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாடசாலைக்கு திரும்பும் திட்டம் செவ்வாய்கிழமை ஒரு அறிக்கையாக வெளியானது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் September மாதம் முழு நேர பாடசாலைக்கு திரும்ப முடியும்.
ஆரம்ப நிலை மாணவர்களும் இடைநிலை மாணவர்களும் வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலைக்கு திருப்பவுள்ளனர். பாடசாலைக்கு திரும்ப விரும்பாத பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தொலைதூர கற்றல் ஒரு தெரிவாக தொடர்ந்தும் இருக்கும்.
தரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும். Kindergarten மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்படமாட்டாது.
26 பக்கம் கொண்ட பாடசாலைக்குத் திரும்பும் இந்தத் திட்டத்தில், தொற்றின் பரவல் மோசமடைந்தால் அனைத்து மாணவர்களும் தொலைதூரக் கற்றலுக்குத் திரும்ப கூடிய சாத்தியக்கூறு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்விச் சபைகள் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என அரசாங்கம் தனது திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.