Delta மாறுபாட்டினால் கனடா COVID தொற்று பரவலின் நான்காவது அலையை நோக்கி செல்கிறது என எச்சரிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை வெளியான புதிய தேசிய modelling தரவுகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எத்தனை பேர் முழுமையாக தடுப்பூசி போடுகிறார்கள் என்பதைப் பொறுத்து நான்காவது அலையின் தீவிரம் நிர்ணயிக்கப்படும் என தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam கூறினார்.
கனடா புதிய தொற்றின் அதிகரிப்பை எதிர்கொள்வதாக கூறும் புதிய தேசிய modelling தரவுகள், தொடர்புகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் மேலும் ஆயிரக்கணக்கான தொற்றுகள் கணிக்கப்படும் என குறிப்பிடுகிறது.
தொற்றின் பரவலை அதிகமாக்கும் Delta மாறுபாடு முன்வைக்கும் கடுமையான அச்சுறுத்தலைக் காட்டும் புதிய modelling தரவுகள், தடுப்பூசி பெறாதவர்களினால் நாடு தொற்றின் நான்காவது அலைக்குள் தள்ளப்படும் அபாயத்தைக் காட்டுகிறது.
அண்மைய காலத்தில் புதிய தொற்றுக்களின் தொடர்ச்சியான சரிவுக்குப் பிறகு, கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தற்போது எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் முயற்சிகள் மூலம் சமூக அளவிலான தொடர்பு விகிதங்கள் மிக விரைவாக அதிகரித்தால், தொற்றின் வலுவான மீள் எழுச்சியை அனுபவிக்கக்கூடும் என்பதை புதிதாக வெளியான modellling குறிக்கிறது.