Ontarioவில் COVID தொற்றுக்கள் மூன்று வாரங்களில் முதல் முறையாக 200ஐ தாண்டி அதிகரித்துள்ளது.
சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை 200க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களைப் பதிவு செய்துள்ளனர். வியாழக்கிழமை பதிவான 218 தொற்றுக்கள், மூன்று வாரங்களில் முதல் முறையாக 200க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்துள்ளன.
வியாழக்கிழமை அறிக்கை மாகாணம் முழுவதும் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கையை 549,952 ஆக உயர்த்தியுள்ளது. இதில் 539,200 பேர் தொற்றில் இருந்து சுகமடைந்துள்ளனர். மேலும் COVID தொடர்பான 9,328 மரணங்களும் இதில் அடங்குகின்றது.
தற்போது, பதிவான தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 165 ஆக உள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்னர் 155ஆக இருந்தது.