Toronto பெரும்பாகத்தில் வெள்ளிக்கிழமை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
எரிவாயுவின் விலை வெள்ளிக்கிழமை லீட்டருக்கு மூன்று சதங்கள் உயர்ந்து 135.9 ஆக விற்பனையாகின்றது.
தொடர்ந்தும் எரிவாயுவின் விலை Toronto பெரும்பாகத்தில் உயரும் என தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமையும் எரிவாயுவின் விலை ஒரு லீட்டருக்கு ஒன்று அல்லது இரண்டு சதங்கள் உயரக்கூடும் என கனடாவின் மலிவு எரிசக்தியின் தலைவரான Dan McTeague தெரிவித்தார்.
தொற்றுக்கு முந்தைய நிலைகளுக்கு எரிவாயுவின் தேவை நகரும் போது, விலைகள் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.