கனடாவும் அமெரிக்காவும் COVID பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பதற்கான உரிமை உள்ளது என அமெரிக்காவுக்கான கனடாவின் தூதர் Kirsten Hillman தெரிவித்தார்.
கனடாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது எல்லை சமச்சீர்மைக்கான உத்தரவாதம் இல்லை எனவும் அவர் கூறினார்.
August 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் என கனேடிய மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் கனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா August மாதம் 21ஆம் திகதி வரை நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.