கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் Justin Trudeau தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இலங்கையில் கறுப்பு ஜூலையின் கொடூர நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களை இன்று கனடாவிலும் உலகளாவிய ரீதியிலும் நினைவுகூரும் தமிழர் சமூகத்துடன் தானும் இணைந்து கொள்வதாக Trudeau தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
இலங்கைத்தீவில் அனைவருக்கும் நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் Trudeau தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.
இந்த இலக்குகளை நோக்கி செயல்படும் அனைவரின் முயற்சிகளையும் கனடா தொடர்ந்து ஆதரிக்கிறது எனவும் கனடிய பிரதமரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.