February 22, 2025
தேசியம்
செய்திகள்

O’Tooleலை விட Singhகை கனடியர்கள் சிறந்த பிரதமராக பார்க்கிறார்கள் – புதிய கருத்துக் கணிப்பு!!

இலையுதிர்காலத்தில் ஒரு பொது தேர்தல் நடைபெறுவதை 26 சதவீத கனேடியர்கள் மாத்திரமே ஆதரிக்கிறார்கள் என புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

37 சதவிகித கனேடியர்கள் இலையுதிர்கால தேர்தலின் எண்ணத்தில் வருத்தமடைந்துள்ளனர் எனவும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகின்றது.

கனடாவில் ஒரு தேர்தலுக்கான அழைப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக விடுக்கப்படவில்லை. ஆனாலும் பிரதமர் Justin Trudeau நாடளாவிய ரீதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
பல்வேறு நிதி அறிவிப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் வரவிருக்கும் வாரங்களில் தேர்தல் அறிவித்தல் ஒன்று வெளியாகக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. கனேடியர்களில் 37 சதவீதம் பேர் எதிர்வரும் தேர்தலின் போது நேரில் வாக்களிப்பதற்கு பதிலாக அஞ்சல் மூலம் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்

அதேவேளை Conservative கட்சியின் தலைவர் Erin O’Tooleலை விட கனடியர்கள் NDPயின் தலைவர் Jagmeet Singhகை ஒரு சிறந்த பிரதமராக பார்க்கிறார்கள் என மற்றும் ஒரு கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

இந்த கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 25 சதவீதம் பேர் Trudeauவை சிறந்த பிரதமராக தேர்வு செய்தனர். Singh, 19 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், 13 தவீதத்துடன் O’Toole மூன்றாவது இடத்திலும் இந்தக் கருத்துக் கணிப்பில் உள்ளனர் .

தீர்மானிக்கப்பட்ட வாக்காளர்களில் 34 சதவீதம் பேர் Liberal கட்சியை ஆதரிப்பதாகவும், Conservative கட்சியின் ஆதரவு 29 சதவீதமாகவும், NDPக்கான ஆதரவு 22 சதவீதமாகவும் இருந்ததாகவும் கூறினர்.

கனேடிய தேர்தல் திணைக்களம் ஒரு விரைவான தேர்தலுக்கு தயாராக இருக்கும் என கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி Stephane Perrault கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

Related posts

Quebec வாசிகள் குறித்த கருத்துகளுக்கு புதிய இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதி மன்னிப்பு கோரினார்

Lankathas Pathmanathan

CTVக்கு எதிராக வழக்கில் தீர்வை எட்டிய Patrick Brown

Lotto Max சீட்டிழுப்பில் $133 மில்லியன் வெல்லலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment