முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் கனடாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
August 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்கு அனுமதிக்கும் என கனேடிய மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. கனடா அமெரிக்கா எல்லை கடந்த வருடம் March 21ஆம் திகதி முதல் ஒப்பந்தத்தின் மூலம் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.
August மாதம் 9ஆம் திகதி முதல் சர்வதேச விமானங்களை ஏற்றுக் கொள்ளும் விமான நிலையங்களின் எண்ணிக்கையை நான்கு முதல் ஒன்பது வரை விரிவுபடுத்துவதாகவும் அரசாங்கம் அறிவித்தது.
அதேவேளை எல்லை நடவடிக்கைகளை தளர்த்துவதை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர், September மாதம் 7ஆம் திகதி முதல் ஏனைய வெளிநாட்டினருக்கு நீட்டிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கனடாவில் தொற்றின் நிலைமை தொடர்ந்து சாதகமாக இருந்தால் மட்டுமே இந்த தளர்வு அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் இருந்து வரும் அனைத்து வணிக மற்றும் தனியார் விமானங்களுக்குமான தடையும் நீடிக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra அறிவித்தார். Delta மாறுபாட்டின் அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.