February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவின் தடுப்பூசி வழங்கும் உத்தியால் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைகிறது: பிரதமர்

கனடாவின் தடுப்பூசி வழங்கும் அணுகுமுறை சரியான முறையில் நகர்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

கனடாவின் தடுப்பூசி வழங்கும் உத்தியால் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பிரதமர் கூறினார். COVID தடுப்பூசிகளை கலந்து வழங்குவதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி அண்மையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கனேடிய பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

தடுப்பூசிகளை கலந்து வழங்கும் விடயத்தில் கனடாவின் அணுகுமுறை பாதுகாப்பானது என கனேடிய சுகாதார அதிகாரிகளும் மருத்துவர்களும் தெரிவித்தனர். இந்த மாத இறுதிக்குள் 68 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ள நிலையில் கோடை இறுதிக்குள் தடுப்பூசி பெற தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும் பிரதமர் Trudeau மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இன்றைய தனது ஊடக அறிக்கையில் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam கூறினார். கடந்த ஏழு நாட்களில் கனடாவில் தினமும் சராசரியாக 451 தொற்றுக்கள் பதிவாகின்றன.

செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 326 தொற்றுக்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை மீட்க Amber எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment