தேசியம்
செய்திகள்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Mary Simon கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Simon கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். July மாதம் 26ஆம் திகதி Simon, கனடாவின் 30ஆவது ஆளுநர் நாயகமாக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

Simon ஒரு சுதேச தலைவர் மற்றும் முன்னாள் தூதர் ஆவார்.

கனடாவின் முன்னாள் ஆளுநர் நாயகம் Julie Payette பதவி விலகிய ஐந்து மாதங்களுக்குப் பின்னர் Simon புதிய ஆளுநர் நாயகமாக பிரதமர் Justin Trudeauவினால் நியமிக்கப்பட்டார்.

Related posts

மத்திய அரசின் சுகாதாரப் பாதுகாப்பு நிதி உதவியை ஏற்க முதல்வர்கள் முடிவு

Lankathas Pathmanathan

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்படும் தந்தை

Lankathas Pathmanathan

உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது – கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment