தேசியம்
செய்திகள்

Ontario பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு நகர்கிறது!

Ontario மாகாணம் பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு ஏற்கனவே திட்டமிட்டதைவிட  ஐந்து நாட்களுக்கு முன்னதாக நகர்கிறது.

பொருளாதார  மறுதிறப்பு  திட்டத்தின் மூன்றாம் படிக்கு Ontario July மாதம்  16ஆம் திகதி நகர்கிறது. வெள்ளிக்கிழமை காலை சந்தித்த அமைச்சரவை இதற்கான  முடிவை எடுத்தது. பின்னர் Ontario அரசாங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில்  இது குறித்து  அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் உணவகங்களின் உள்ளே இருந்து உணவருந்துவதற்கும், உடல் பயிற்சி நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படும்.

இதனை ஒரு வரவேற்கத்தக்க செய்தி என முதல்வர் Doug Ford தெரிவித்தார். ஆனாலும் தடுப்பூசி பெற விரும்பும் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் முயற்சிகளை தொடர்வோம் எனவும் Ford கூறினார்

குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு மாகாணம் 3வது கட்டத்தில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related posts

கனடிய இராணுவ உறுப்பினர் Latviaவில் உயிரிழந்தார்!

Lankathas Pathmanathan

பதவி விலகும் சுகாதார அமைச்சர் Elliott

Lankathas Pathmanathan

Ontarioவின் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment