COVID தொற்றின் நான்காவது அலை கனடாவில் ஒரு யதார்த்தமாக மாற வேண்டிய அவசியமில்லை என தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Delta மாறுபாட்டின் ஆதிக்கத்துடன் கூட இந்த நம்பிக்கையான கணிப்பு வெளியாகியுள்ளது.
கனடியர்கள் விரைவில் தடுப்பூசி போடுவதை தொடர வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கனடியர்கள் தடுப்பூசி போடுவதை தொடர்ந்தால், இங்கிலாந்து முழுவதும் இப்போது அதிகரித்து வரும் நான்காவது அலை கனடாவில் ஒரு யதார்த்தமாக மாற வேண்டிய அவசியமில்லை எனவும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.