40 சதவீதத்திற்கும் அதிகமான, தடுப்பூசிபெற தகுதியான கனேடியர்கள் முழுமையாக COVID தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர்.
கொள்முதல் அமைச்சர் அனிதா அனந்த் இந்த தகவலை வெளியிட்டார். திங்கட்கிழமை வரை 78 சதவீதத்திற்கும் அதிகமான தகுதியான கனேடியர்கள் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதுவரை 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்துள்ளன. இவற்றில் 39 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனேடியர்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்த வாரம் மேலும் 3.7 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன. இதன் மூலம் இந்த வார இறுதிக்குள் 53.7 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் .
July மாத இறுதிக்குள் 68 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் எனவும் அமைச்சர் அனந்த் எதிர்வு கூறினார்.