கடந்த September மாதத்தின் பின்னர் புதன்கிழமை, முதல் முறையாக Ontarioவில் 200க்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின.
புதன்கிழமை சுகாதார அதிகாரிகள் 184 தொற்றுக்களை அறிவித்தனர். இது கடந்த September 10ஆம் திகதிக்கு பின்னர் Ontarioவில் பதிவான அதிகுறைந்த தொற்றுக்களாகும்.
தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 268ஆகவும் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 316ஆக இருந்தது.
Ontarioவில் புதன்கிழமை 14 மரணங்களும் பதிவாகியுள்ளன. Ontarioவில் 257 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை இதுவரையில் 14.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.