December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஒரு நாளுக்கான அதிகூடிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட புதிய சாதனை Torontoவில் பதிவு

COVID காலத்தில் ஒரு நாளுக்கான அதிகூடிய தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை Torontoவில் செலுத்தப்பட்டன.

Scotiabank அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 62,897 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இந்த தடுப்பூசி முகாமுக்கான இலக்காக 25,000 தடுப்பூசி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய சாதனை பதிவாகியுள்ளது.இவற்றில் 5,072 பேர் தமது முதலாவது தடுப்பூசியும், 57,825 பேர் இரண்டாவது தடுப்பூசியும் ஞாயிற்றுக்கிழமை பெற்றனர்.

கடந்த April மாதம் 30ஆம் திகதி அமெரிக்காவின் Texas மாநிலத்தில் ஒரு தடுப்பூசி முகாமில்  17,003 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டமை ஒரு நாளுக்கான சாதனையாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:58க்கு, Torontoவில் 17,004 ஆவது தடுப்பூசி செலுத்தி வட அமெரிக்க சாதனை முறியடிக்கப்பட்டது.

Related posts

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan

 November மாதத்தில் வீடு விற்பனை குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment