Ontario மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் Doug Ford இந்த மாற்றத்தை அறிவித்தார். இந்த மாற்றத்தின் மூலம் மீண்டும் அமைச்சராக Rod Phillips பதவி ஏற்கின்றார். நீண்டகால பராமரிப்பு அமைச்சர் பதவி Phillipsக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் நிதி அமைச்சர் Phillips, கடந்த December மாதம் தனது அமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். கனேடிய பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டபோது, இரகசியமாக Caribbean தீவுக்கு Phillips விடுமுறைக்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
தவிரவும் இன்றைய அமைச்சரவை மாற்றத்தால் பல இளைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.