இனவெறி காரணமாக பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பசுமைக் கட்சியின் தலைவி குற்றம் சாட்டியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் ஆளும் குழுவின் அவசர கூட்டத்தின் போது, அவரை வெளியேற்றுவதற்கான ஒரு சிக்கலான செயல்முறையைத் தூண்டுவதை பசுமைக் கட்சித் தலைவி Annamie Paul தவிர்த்தார்.
Annamie Paul நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை எதிர்கொள்கிறார். கட்சியின் நிர்வாக குழு செவ்வாய்க்கிழமை இரவு இதற்கு ஒரு செயல்முறை தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த செயல்முறை தீர்மானத்தை பின்பற்றா விட்டால் கட்சியின் அரசியலமைப்பின் படி July மாதம் 20ஆம் திகதி தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
கட்சியின் வழிநடத்துதல், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் குறித்த தலைவரின் நிலைப்பாடு தொடர்பாக பல மாதங்களாக ஏற்பட்ட உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.