தேசியம்
செய்திகள்

எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த பேச்சுக்கள் ஆரம்பம்!

எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த பேச்சுவார்த்தைகளை கனடாவும் அமெரிக்காவும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் அமுலில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை எவ்வாறு நீக்குவது என்பது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்துரையாட ஆரம்பித்துள்ளனர்.

கனடாவின் மேற்கு மாகாணங்களின் தலைவர்கள் இந்த வாரம் பிரதமர் Justin Trudeauவிடம் சர்வதேச எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான விரிவான திட்டம் குறித்து கேள்வி எழுப்பவுள்ள நிலையில் இந்த உரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆனாலும் எல்லைக் கட்டுப்பாடுகளை  நீக்கும் விடயத்தில் உடனடி நடவடிக்கை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என கூறப்படுகின்றது.  

கடந்த ஆண்டு March மாதம் முதல் அமுலில் வந்த எல்லை கட்டுப்பாடுகள் மாதாந்த அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும்  21ஆம் திகதி  காலாவதியாகிறது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு கனடிய பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

Liberal கட்சியில் இணையும் Mark Carney?

Lankathas Pathmanathan

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment