December 12, 2024
தேசியம்
செய்திகள்

இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!

கனடா இந்த மாதம் மாத்திரம் 20 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது.

கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். July மாத இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளை பெறும் நிலை உள்ளது. இதன் மூலம்  37.59 மில்லியன் மக்கள் தொகையில் 80 சதவீதமானவர்கள் கனடாவில் தடுப்பூசியை பெறக்கூடிய நிலை தோன்றியுள்ளது

இதுவரை 32.9 மில்லியன் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும்  விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தகுதியுள்ள கனடியர்கள் இதுவரை 75 சதவீதமானவர்கள் வரை குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

இலங்கை அரசின் தலைமைக்கு எதிராக சர்வதேச வழக்குகள் நடத்தப்பட வேண்டும்: கனடிய தமிழ் அமைப்புகள் கோரிக்கை

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் கனடா 24 பதக்கங்கள் வெற்றி!

Gaya Raja

Leave a Comment