கனடாவில் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின.
திங்கட்கிழமை 877 தொற்றுக்களை கனேடிய சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். இவற்றில் அதிக தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின.
திங்கட்கிழமை Ontarioவில் 447 தொற்றுக்களும் நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளன. Manitobaவில் 124 தொற்றுக்களும் இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. Quebecகில் 123 தொற்றுக்களும் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. Albertaவில் 115 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
தவிர ஏனைய மாகாணங்களில் 100க்கும் குறைவான தொற்றுக்கள் திங்கட்கிழமை பதிவாகின.