G20 நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் குறைந்தது ஒரு தடுப்பூசி பெற்றவர்களில் கனடா முன்னணி வகிக்கிறது.
கனடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். தகுதியான கனடியர்களில் குறைந்தது மூன்றில் இருவர் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளனர்.
இதுவரை 28.4 மில்லியன் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. அவற்றில் 24.4 மில்லியன் தடுப்பூசிகள் கனேடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.